என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய புதிய கட்டிடத்தில் முன்பதிவு டிக்கெட்டுகள் வினியோகம் - இன்று முதல் மீண்டும் அமலுக்கு வந்தது
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தினந்தோறும் ஏராளமான ரெயில்கள் தமிழகம் மட்டுமின்றி மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- முன்பதிவு செய்வதற்காக தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சந்திப்பு ரெயில் நிலையம் வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தினந்தோறும் ஏராளமான ரெயில்கள் தமிழகம் மட்டுமின்றி மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ரெயில் கள் இயக்கப்படுகிறது.
இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகிறது.
புதிய கட்டிடம்
முன்பதிவு செய்வதற்காக தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சந்திப்பு ரெயில் நிலையம் வருகிறார்கள். இதனால் முன்பதிவு செய்வதற்காக புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டது.
அதன் பின்னர் பழைய கட்டிடத்தில் உள்ள 3 கவுண்டர்களில் நடைமேடை டிக்கெட் மற்றும் உடனடி டிக்கெட்களும் வழங்கப்பட்டு வந்தது.புதிய கட்டிடத்தின் 3 கவுண்டர்களிலும் முன்பதிவு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
பயணிகள் கூட்டம்
ஆனால் சமீபத்தில் பழைய கட்டிடத்தில் ஒரு கவுண்டரில் முன்பதிவு செய்யும் வசதி கொண்டு வரப்பட்டது. இதனால் மற்ற 2 கவுண்டர்களில் மட்டும் வழக்கமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் பழைய கட்டிடத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து மீண்டும் பழைய முறையை அமல்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இதனால் பழைய கட்டிடத்தில் இன்று வழக்கம் போல் சாதாரண டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
மேலாளர் பேட்டி
இதுகுறித்து நெல்லை ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் கூறியதாவது:-
பயணிகள் சிரமத்தை போக்கும் வகையில் பழைய முறையில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகள் இன்று முதல் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே வழக்கம்போல் அங்கு டிக்கெட்டுகள் எடுத்துக்கொள்ளலாம்.
எனினும் பழைய கட்டிடத்தில் உள்ள கவுண்டர்களில் கூட்டம் இல்லாத நேரத்தில் முன்பதிவு டிக்கெட்டுகள் வழங்கப்படும். அதேபோல் புதிய கட்டிடத்தில் உள்ள கவுண்டர்களில் பயணிகள் இல்லாத போது நடைபாதை டிக்கெட் மற்றும் சாதாரண டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்