என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை-குட்டம் அரசு பஸ்சை தினமும் சீராக இயக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
- நெல்லையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டு சாத்தான்குளத்துக்கு 5 மணிக்கு வந்து சேரும்.
- பஸ் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படாமல் நிறுத்தம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டு தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளம்:
நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக குட்டத்துக்கு அரசு பஸ் தடம் எண் 173 ஜி இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் அதிகாலை நெல்லையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டு சாத்தான்குளத்துக்கு 5 மணிக்கு வந்து சேரும். வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை முறையாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பஸ்சை நம்பி வெளியூர்களில் இருந்து அதிகாலை வரும் வியாபாரிகள், கொள் முதல் செய்ய செல்லும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் இந்த பஸ் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படாமல் நிறுத்தம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள், வியா பாரிகள் பெரிதும் பாதிக்க ப்படுகின்றனர். ஆதலால் போக்கு வரத்து துறை அதிகாரிகள் இதனை கவனித்து தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.