search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை பால் உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு சங்கம் சாதனை
    X

    கறவை உறுப்பினர்களுக்கு சங்க தலைவர் கட்டளை அன்பு பரிசு வழங்கிய காட்சி. அருகில் சங்க செயலாளர் வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    நெல்லை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சாதனை

    • நெல்லை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்யப்படும் பால் அரசு உத்தரவின்படி தினமும் நெல்லை ஆவினுக்கு அனுப்பப்படுகிறது.
    • கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2022 ஆண்டு மார்ச் முடிய 6 மாத காலத்திற்கு 65 கிளை கறவைக்கூடங்கள் மூலம் 12 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்யப்படும் பால் அரசு உத்தரவின்படி தினமும் நெல்லை ஆவினுக்கு அனுப்பப்படுகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2022 ஆண்டு மார்ச் முடிய 6 மாத காலத்திற்கு 65 கிளை கறவைக்கூடங்கள் மூலம் 12 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    பால் உற்பத்தியாளர்கள் கறவை செய்த 11,44,775.500 லட்சம் லிட்டர் பாலுக்கு கூடுதல் கொள்முதல் விலையாக லிட்டருக்கு ரூ.4.50 வீதம் கறவை உறுப்பினர்களுக்கு சங்கத் தலைவர் கட்டளை அன்பு பரிசாக வழங்கினார்.

    அதன்படி மொத்தம் ரூ.51 லட்சத்து 51 ஆயிரத்து 489 ரூபாய் வழங்கப்பட்டது.

    முதல் பரிசாக பால்கட்டளையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு ரூ.75,224-ம், இரண்டாம் பரிசாக ரஸ்தாவை சேர்ந்த வேல் குமார் என்பவருக்கு ரூ.48,900, மூன்றாம் பரிசாக சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்த சந்தனராஜ் என்பவருக்கு ரூ.46,192-ம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் மாரியப்பன், சங்கச் செயலாளர் வெங்கடாசலம், சிப்பந்திகள், நிர்வாகிகள் மற்றும் கறவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×