search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா: விநாயகர் திருவிழா கொடியேற்றத்துடன்  தொடங்கியது
    X

    விநாயகர் திருவிழா கொடியேற்றத்தைதொடர்ந்து, கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டிய போது எடுத்தபடம்.

    நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா: விநாயகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
    • கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று ஆகும்.

    விநாயகர் திருவிழா

    48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் உற்சவமான விநாயகர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமர்சையாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிப் பட்டம் கோவில் உட்பிரகா ரத்தில் பல்லக்கில் வீதி உலா கொண்டு வரப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து, கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனையும் நடைபெற்றது. 6 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் விநாயகருக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் உட்பிரகாரத்தில் வீதிஉலாவும் நடைபெறும். இதனைத்தொடர்ந்து 11-ந் தேதி முதல் மூவர் உற்சவமும், அதனைத் தொடர்ந்து 16-ந் தேதி முதல் சந்திரசேகரர் பவானி அம்பாள் உற்சவமும் நடைபெறுகிறது.

    தேரோட்டம்

    பின்னர் 24-ந்தேதி ஆனிப்பெரும் திருவிழா கொடியேற்றம் சுவாமி சன்னதி முன்புள்ள பெரிய கொடிமரத்தில் நடை பெறுகிறது. ஜூலை 2-ந்தேதி ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேரோட்டத் திருவிழா நடைபெறுகிறது.

    இன்று காலை விநாயகர் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×