என் மலர்
உள்ளூர் செய்திகள்
நாமக்கல்லில் ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலையம்
- தமிழகத்தில் முக்கிய தொழில் நகரமாக நாமக்கல் விளங்குகிறது.
- இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ,வெளிநாடுகளுக்கும் தினமும் 4.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நாமக்கல்:
தமிழகத்தில் முக்கிய தொழில் நகரமாக நாமக்கல் விளங்குகிறது. இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ,வெளிநாடுகளுக்கும் தினமும் 4.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது .
முட்டை ஏற்றுமதியில் நாமக்கல் மண்டலம் முன்னிலை வகிக்கிறது. அதேபோல கறிக்கோழி ஏற்றுமதியில் தமிழகத்தில் நாமக்கல் மண்டலம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இங்கிருந்து தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும் லாரி தொழிலிலும் நாமக்கல் முக்கிய இடத்தை பிடித்து உள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த லாரிகள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் இயக்கப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் நாமக்கல் நகருக்குள் லாரிகள் வந்து செல்கின்றன.
மேலும் நாமக்கல் வழியாக திருச்சி, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர் ,ஓசூர் ,பெங்களூர், கோவை ,திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல்லில் இருந்து மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம், பள்ளிபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் நாமக்கல் நகரில் முக்கிய சாலையான சேலம் சாலை, மோகனூர், திருச்சி சாலை மற்றும் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து நகரின் வெளிப்பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை மாவட்ட தி.மு.க.செயலாளரும் எம்.பி.யுமான ராஜேஷ்குமார் , அமைச்சர் மதிவேந்தன், ராமலிங்கம் எம்.எல்.ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சா லையில் முதலைப்பட்டி பைபாஸ் அருகே புதிய பஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ. 20 கோடி செலவில் பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது . சேலம், தர்மபுரி, மதுரை , திருச்சி, நாகை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் இந்த பஸ் நிலையம் பிரமாண்டமாக ரிங் ரோடு வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
4 நடைமேடைகளுடன் 60 பஸ்கள் ஒரே நேரத்தில் பஸ் நிலையத்தில் நிற்கும் வகையில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பயணிகள் அமர நவீன இருக்கைகளுடன் கட்டிடங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உட்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட உள்ளது .
இந்த பணிகள் ஓர் ஆண்டுக்குள் முடிக்கும்
வகையில் திட்டமி டப்பட்டுள்ளது.இந்த பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் போது நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.