search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிஜம் ஏரிப்பகுதியில் புதிய அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படும்
    X

    வனப்பகுதி சுற்றுலா இடங்களில் மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார்மீனா ஆய்வு செய்தார்.

    பேரிஜம் ஏரிப்பகுதியில் புதிய அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படும்

    • கழிப்பறை வசதி இல்லாத பைன் மரக்காடுகள் பகுதியில் வரும் 15-ந் தேதிக்குள் பயோ கழிப்பறைகள் அமைக்கப்படும். வத்தலக்குண்டு சாலையில் உள்ள மயிலாடும்பாறை சுற்றுலா இடம் திறக்கப்பட்டு கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் அமைத்து தரப்படும்.
    • நகரில் உலா வரும் காட்டு மாடுகளைபொதுமக்கள் கூடும் பகுதிகளில் வராமல் தடுப்பதற்காக வனத்துறையைச்சேர்ந்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் உலக அளவில் முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு புதியதாக யோகேஷ்குமார்மீனா மாவட்ட வன அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் அவர் வனப்பகுதி சுற்றுலா இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் குறிப்பாக கழிப்பறை வசதி இல்லாத பைன் மரக்காடுகள் பகுதியில் வரும் 15-ந் தேதிக்குள் பயோ கழிப்பறைகள் அமைக்கப்படும். வத்தலக்குண்டு சாலையில் உள்ள மயிலாடும்பாறை சுற்றுலா இடம் திறக்கப்பட்டு கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் அமைத்து தரப்படும். மூடப்பட்டுள்ள பாம்பார் நீர்வீழ்ச்சி, பியர் சோலா அருவி போன்ற பல்வேறு இடங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நகரில் உலா வரும் காட்டு மாடுகளைபொதுமக்கள் கூடும் பகுதிகளில் வராமல் தடுப்பதற்காக வனத்துறையைச்சேர்ந்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். அதே போல பேரிஜம் ஏரி பகுதியிலும் புதிய அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன என தெரிவித்தார்.

    Next Story
    ×