என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவர்களுக்கு இன்ஸ்பெக்டர் சங்கர் அறிவுரை வழங்கி பேசினார்.
தேவதானப்பட்டியில் ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
- தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக சங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், உரிமையாளர்கள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக சங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனையடுத்து தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், உரிமையாளர்கள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்தில் சட்ட விதிகளின்படி ஓட்டுநர் சீருடை அணிந்தும், உரிய ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவும், நேம் பேஜ் சட்டையில் பொறுத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கட்சி, மதம் சார்ந்த கொடிகளோ அடையாளமோ ஆட்டோவில் இருக்க கூடாது. பயணிகளிடம் கனிவாக நடக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிக்கும் பட்சத்தில் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதைப் போன்று ஒலிபெருக்கிகளில் கட்சி பாடல்கள் அதிக அளவில் ஒலி வைத்து ஒலிபரப்பக் கூடாது. அது போன்ற வாடகை டாக்ஸி டிரைவர்கள் ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தேவதானப்பட்டி பகுதியில் மொத்தம் 4 ஆட்டோ உரிமையாளர்களின் சங்கம் உள்ளது. அதில் ஒரு சங்கத்தினர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






