search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் ரூ.1 கோடியில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி- எம்.எல்.ஏ.க்கள் அப்துல்வகாப், நயினார்நாகேந்திரன் இணைந்து தொடங்கி வைத்தனர்
    X

    சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ.க்கள் அப்துல்வகாப், நயினார்நாகேந்திரன் தொடங்கி வைத்த காட்சி. அருகில் துணைமேயர் கே.ஆர்.ராஜூ.

    நெல்லையில் ரூ.1 கோடியில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி- எம்.எல்.ஏ.க்கள் அப்துல்வகாப், நயினார்நாகேந்திரன் இணைந்து தொடங்கி வைத்தனர்

    • ஸ்ரீபுரம் முதல் ஊருடையான்குடியிருப்பு வரை சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • தாமரை சின்னம் பொறித்த குடையை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லையில் ஸ்ரீபுரத்தில் இருந்து தச்சநல்லூர் செல்லும் ஊருடையான் குடியிருப்பு சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை மற்றும் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வந்தது.

    எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தார்

    இதன் காரணமாக அப்பகுதி வியாபாரிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். மந்த நிலையில் நடைபெற்று வந்த அந்த பணியை விரைந்து முடிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்து. இன்று தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    அதன்படி ஸ்ரீபுரம் முதல் ஊருடையான்குடியிருப்பு வரை 831 மீட்டர் சாலை ரூ.1 கோடியில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதனை எம்.எல்.ஏ. க்கள் அப்துல்வகாப், நயினார்நாகேந்திரன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இதில் மாநகராட்சி துணை மேயர் ராஜூ, கவுன்சிலர் ரவீந்தர், தச்சை மண்டல உதவி கமிஷனர் வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சலசலப்பு

    ஸ்ரீபுரத்தில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைப்பதற்காக அப்துல்வகாப் எம்.எல்.ஏ. மற்றும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் வந்திருந்த நிலையில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக நயினார் நாகேந்திரனுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் பா.ஜனதா கட்சி கொடி கலரில் இருந்த குடையை விரித்து பிடித்தனர்.

    அப்போது அங்கு வந்த அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் தாமரை சின்னம் பொறித்த குடை பிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

    பேட்டி

    பின்னர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து போட்டியிடுகிறோம். பா.ஜனதா ஆதரவு கொடுத்துள்ள அ.தி.மு.க ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கடலில் தான் பேனா சின்னம் வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை. கடலில் பேனா சின்னம் அமைத்தால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். அதிகமான செலவு ஏற்படும். அதற்கு மாற்றாக அதே செலவில் வேறொரு இடத்தில் பேனா சின்னத்தை நிறுவலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×