search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பணிகள் ஒதுக்குவதில் பாரபட்சம் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
    X

    கவுன்சிலர்கள் கூட்டம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினாநாயகம் தலைமையில் நடைபெற்றது.

    நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பணிகள் ஒதுக்குவதில் பாரபட்சம் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

    • நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • அனைத்து கவுன்சிலர்க ளுக்கும் ஒரே மாதிரியான அளவில் நிதி ஒதுக்க வேண்டும். இதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி கூச்சல் போட்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர் யாக ப்பன், ஒன்றிய ஆணையாளர் பஞ்சவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய பாரபட்சமின்றி அனைத்து கவுன்சிலர்க ளுக்கும் ஒரே மாதிரியான அளவில் நிதி ஒதுக்க வேண்டும். இதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி கூச்சல் போட்டனர்.

    துணைத்தலைவர் யாகப்பன், அனைத்து கவுன்சிலர் வார்டு பகுதி களுக்கும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் வகையில் ஒரேமாதிரியாக நிதி ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். அதனை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

    சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட நெசவு தொழிலுக்கான கட்டிட ங்கள் பழுதடைந்து பாம்புகள், பல்லிகளின் புகலிடமாக புதர்மண்டி கிடக்கிறது. அதனை அகற்றி விடவேண்டும்.

    நிலக்கோ ட்டை ஒன்றிய பகுதியில் உள்ள செங்கட்டாம்பட்டி கண்மாய் வழியாக சீத்தாபுரம் பாப்பன்குளம் கண்மாய், குளத்துப்பட்டி பெரியகுளம் கண்மாய், கொங்கர் குளம் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் நிரப்புவதற்கு ஏதுவாக வைகை ஆற்று படுகையில் இருந்து புதிய கிளை வாய்க்கால் வெட்ட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் பேசினர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) அண்ணாதுரை நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×