search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் அருகே மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர்
    X

    மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கிய காட்சி.

    சாத்தான்குளம் அருகே மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர்

    • சித்த மருத்துவ அலுவலர் நிலவேம்பு குடிநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமாக பேசினார்.
    • முதல் கட்டமாக போலையர்புரம் நடுநிலைப்பள்ளி, கொழுந்தட்டு அங்கன்வாடி குழந்தைகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பகுதி பள்ளி மாணவ- மாணவி களுக்கு முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ஜெகதீஷ் தலைமையிலான குழுவினர் நிலவேம்பு குடிநீர் தயார் செய்து வழங்கினர்.

    இதன் தொடக்கமாக போலையர்புரம் டி.என்.டி.றி.ஏ.நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை கிங்சிலி தலைமை தாங்கினார். ஆசிரியர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் வரவேற்றார்.

    சித்த மருத்துவ அலுவலர் நிலவேம்பு குடிநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமாக பேசினார். முதல் கட்டமாக போலை யர்புரம் நடுநிலைப்பள்ளி, கொழுந்தட்டு ஆர்.சி. தொடக்கப்பள்ளி, பொத்தகாலன்விளை ஆர்.சி.ஆண்கள் மற்றும் பெண்கள் தொடக்கப்பள்ளிகள், கொழுந்தட்டு அங்கன்வாடி குழந்தைகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மருந்தாளுநர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

    Next Story
    ×