என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![என்.எல்.சி. யை கண்டித்து 7 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்: 26 பேர் மீது வழக்கு என்.எல்.சி. யை கண்டித்து 7 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்: 26 பேர் மீது வழக்கு](https://media.maalaimalar.com/h-upload/2023/10/24/1971266-makkal-aarpattam.webp)
கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
என்.எல்.சி. யை கண்டித்து 7 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்: 26 பேர் மீது வழக்கு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 7 கிராமங்களில் கடந்த 1990 முதல் 2009 வரை நிலங்களை என்.எல்.சி.நிர்வாகம் கையகப்படுத்தியது.
- போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்த மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
கடலூர்:
என்.எல்.சியை கண்டித்து 7 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு அருகே உள்ள கத்தாழை, மும்முடி சோழகன், சாத்தப்பாடி உள்ளிட்ட 7 கிராமங்களில் கடந்த 1990 முதல் 2009 வரை நிலங்களை என்.எல்.சி.நிர்வாகம் கையகப்படுத்தியது. அந்த நிலங்களுக்கு மறு குடியமர்வு திட்டத்தில் இழப்பீடு வழங்க கோரியும், மத்திய அரசு அறிவித்ததை மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி. நிர்வாகமும் வழங்க மறுப்பது ஏன் என கூறி 7 கிராம மக்கள் வளையமாதேவி பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பா ட்டம் நடத்தினார்கள். அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
தகவல் கிடைத்ததும் சேத்தியா தோப்பு டி.எஸ்.பி. ரூபன் குமார் மற்றும் போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்த மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மாவட்ட நிர்வாகம் மற்றும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து ெபாதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.