search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் இயக்க 95 புதிய வாகனங்களை நிறுவன அதிபர் தொடங்கி வைத்தார்
    X

    புதிய வாகனங்களை என்.எல்.சி. அதிபர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி தொடங்கி வைத்த காட்சி.

    என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் இயக்க 95 புதிய வாகனங்களை நிறுவன அதிபர் தொடங்கி வைத்தார்

    • புதிதாக வாங்கப்பட்ட 95 வாகனங்களை என்.எல்.சி. அதிபர் பிரசன்ன குமார் மோட்டு பள்ளி தொடங்கி வைத்தார்.
    • ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 47 பழைய வாகனங்கள் மாற்றப்பட்டுள்ளன.

    கடலூர்:

    என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சுரங்கப் பகுதியில் இயக்கப்பட புதிதாக வாங்கப்பட்ட 95 வாகனங்களை என்.எல்.சி. அதிபர் பிரசன்ன குமார் மோட்டு பள்ளி, நிறுவன இயக்குனர்கள், உயர் அதி காரிகள் முன்னலையில் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    நெய்வேலியில் உள்ள 3 சுரங்கங்களில் இதுவரை பயன்பாட்டில் இருந்த பழைய வாகனங்கள் மாற்றப் பட்டு புதிதாக 47 பணியாளர் வாகனங்கள், 33 திறந்த வகை லாரிகள், 7 கேண்டீன் வாகனங்கள் மற்றும் 7 எரி பொருள் நிரப்பும் வாகனங்கள் உள்ளட்ட 95 வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது.

    மேலும் மத்திய சுரங்க இயக்குனரகத்தின் சமீபத்திய உமிழ்வு விதிகளுக்கிணங்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் பல்வேறு நவீன வசதிகளுடன் இப் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. சுரங்கத்தில் பணிபுரியும் பணியாளர்கள், சுரங்க பகுதிக்கு சென்று வர பயன்படும் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 47 பழைய வாகனங்கள் மாற்றப்பட்டு அவற்றுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட் டிற்கு வந்தது.

    இந்நிகழ்ச்சியில் சுரங் கங்கள் மற்றும் நித இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் சுரேஷ் சந்திரா சுமன், மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப், மின் துறை இயக்குனர் வெங்கடாசலம், தலைமை அதிகாரி சந்திர சேகர் மற்றும் செயல் இயக்கு னர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×