search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் பாலப்பணிகள் நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் - வாகன ஓட்டிகள் கோரிக்கை
    X

    தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை உப்பாற்று ஓடை மேம்பால பணி நடைபெறுவதால் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் முத்தையாபுரத்தில் பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக நீண்ட நேரமாக காத்திருக்கும் காட்சி.

    தூத்துக்குடியில் பாலப்பணிகள் நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் - வாகன ஓட்டிகள் கோரிக்கை

    • வ.உ.சி. துறைமுகம் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது
    • திருச்செந்தூர் சாலையில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலிருந்து வரும் ரெயில்வே மேம்பாலம் வழி அடைக்கப்பட்டுள்ளது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாலை பணிகள் முடிக்கப்பட்டு மத்தியில் ராட்சத காண்கிரிட் தூண்கள் பொறுத்தும் பணி நேற்று தொடங்கியது.

    தொடர்ந்து வருகிற 11-ந் தேதி வரை பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருச்செந்தூர் சாலையில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலிருந்து வரும் ரெயில்வே மேம்பாலம் வழி அடைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து வாகனங்களும் மாற்று வழியாக பீச் ரோடு ரோச் பூங்கா வழியாக துறைமுகசபை விருந்தினர் விடுதி இணைப்புச்சாலை வழியாக திருச்செந்தூர் சென்று வருகிறது.

    மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டின் வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுபோல திருச்செந்தூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பாலத்தின் தெற்கு பகுதியில் ஏற்கனவே உள்ள சாலையை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்நிலையில் பாலம் பணி நடைபெறக்கூடிய பகுதிகளில் சரியான அறிவிப்பு பலகைகளோ, போக்குவரத்து காவலர்களோ இல்லாமல் இருப்பதால் எதிரெதிரே வரும் வாகனங்களால் மிகப்பெரிய ஆபத்து நடக்கக்கூடும் சூழல் காணப்படுகிறது. மேலும் பாலம் பணி நடைபெறும் பகுதியில் மின்விளக்குகளே இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே பாலம் வேலை நடைபெறும் உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×