என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சேலத்தில் பிளாஸ்டிக் கப் தயாரித்த ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு அதிகாரிகள் நடவடிக்கை சேலத்தில் பிளாஸ்டிக் கப் தயாரித்த ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு அதிகாரிகள் நடவடிக்கை](https://media.maalaimalar.com/h-upload/2022/08/17/1747601-02-plastic-cup.jpg)
சேலத்தில் பிளாஸ்டிக் கப் தயாரித்த ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு அதிகாரிகள் நடவடிக்கை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் காகித கப்களை உற்பத்தி செய்யும் சிறிய தொழிற்சாலை இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
- இனிமேல் பிளாஸ்டிக் கப்கள் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலம்:
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சேலம் கோட்ட என்ஜினீயர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேற்று தாதம்பட்டியில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் காகித கப்களை உற்பத்தி செய்யும் சிறிய தொழிற்சாலை இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஏரித் தெரு வில் இயங்கிய தனியார் பேப்பர் கப்ஸ், சூலக்கரை உடையார் தெருவில் இயங்கிய பேப்பர் கப்ஸ் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. இனிமேல் பிளாஸ்டிக் கப்கள் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர், விற்போரின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு உற்பத்தி எந்திரங்களும் முடக்கப்படும், என்றனர்.