search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டவுன் பூ மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு - 8 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
    X

    வண்ணார்பேட்டையில் அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது எடுத்த படம்.

    டவுன் பூ மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு - 8 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

    • நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி, மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • டவுன் மண்டலத்தில் உள்ள கடைகளில் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் பணி டவுன் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் படி, நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி நெல்லை மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதத்தில் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதிகாரிகள் ஆய்வு

    அந்த வகையில் டவுன் மண்டலத்தில் உள்ள கடைகளில் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் பணி டவுன் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது.

    நெல்லை மாசுக்கட்டுப் பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் சுகுமார் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் டவுண் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படு கிறதா? என ஆய்வு செய்தார்.

    மொத்தம் 46 கடைகள் சோதனை செய்ததில் 15 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்ப டுவது கண்டறியப்பட்டு ரூ. 2,600 விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. 8 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆய்வின்போது மேஸ்திரி கள் சிவக்குமார், முருகன், பாலமுருகன், இசக்கி மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் முத்துராஜ், மாரியப்பன், சேக் மற்றும் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×