search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரும்பாறை அருகே வாலிபர் தவறிவிழுந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
    X

    சம்பவ இடத்தை வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் பார்வையிட்டார்.

    பெரும்பாறை அருகே வாலிபர் தவறிவிழுந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

    • தாண்டிக்குடி போலீசாருக்கும், ஆத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 4 நாட்களாக தேடியும் வாலிபர் கிடைக்கவில்லை.
    • சம்பவ இடத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பெரும்பாறை:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேல சத்திரத்தை சேர்ந்தவர் நாகநாதசேதுபதி அவருடைய மகன் அஜய் பாண்டியன் (வயது 28). இவர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான மங்களம்கொம்பு பகுதியில் தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்து வந்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், தனது நண்பர் கல்யாணசுந்தரம் (25). என்பவருடன் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றார். நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் இறங்கிய அஜய்பாண்டி யனை கல்யாணசுந்தரம் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அஜய்பாண்டியன் திடீரென்று பாறையிலிருந்து நீர்வீழ்ச்சியில் விழுந்தார். இதில், தண்ணீரில் அவர் அடித்துசெல்லப்பட்டார்.

    தாண்டிக்குடி போலீசாருக்கும், ஆத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 4 நாட்களாக தேடியும் அஜய்பாண்டியன் கிடைக்கவில்லை. 4-வது நாள் நேற்றும் ஆத்தூர் தீயணைப்பு மீட்பு பணி அலுவலர்கள் புனிதராஜ், அழகேசன், திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராசு, ஒட்டன்சத்திரம் நிலைய அலுவலர் ராஜேந்திரன் உள்பட 26 பேர் கொண்ட 3 குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ஒரு குழு 100 அடி பள்ளத்தில் கயிறு கட்டி இறங்கி தேடினர்.இந்த நிலையில் காட்டாற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் தேடும் பணியில் ஈடுபட முடியவில்லை. வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார், ஆத்தூர் தாசில்தார் சரவணன், திண்டுக்கல் மாவட்ட உதவி தீயணைப்பு துறை அலுவலர் சுரேஷ் கண்ணன், கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் சரவணன், மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×