search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
    X

    இறைச்சி கடைகளில் அதிகாரிகள் 'திடீர்' சோதனை

    • ஆய்வில் எண்ணெய் பலகாரங்களை பேப்பரில் வைத்து விற்பனை செய்த கடைக்கு ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • இறைச்சி கழிவுகளை உரிய முறையில் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் கொண்டு சென்று அப்புறப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறு–த்தப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் பகுதியில் செயல்படும் இறைச்சி கடைகளில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம், சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து திடீர் என ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் எண்ணெய் பலகாரங்களை பேப்பரில் வைத்து விற்பனை செய்த கடைக்கு ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    மேலும் இறைச்சி கடைகளில் கேரி பேக்குகளுக்கு பதிலாக வாழை இலையை பயன்படுத்த வேண்டும் எனவும், இறைச்சி வாங்க வருபவர்கள் பாத்திரம் கொண்டு வந்து இறைச்சிகளை பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப–ட்டது.

    இறைச்சி கழிவுகளை உரிய முறையில் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் கொண்டு சென்று அப்புறப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் உணவுப் பொருள் விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெறப்பட வேண்டும் எனவும், சென்னிமலை பேரூராட்சியின் கீழ் தொழில்வரியும், உரிமமும் பெறப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் சென்னிமலை பேரூராட்சியின் நிர்வாக சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

    Next Story
    ×