என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை சந்திப்பில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு-கடைகளில் 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
- தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.
- தச்சநல்லூர் மண்டல சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் பணியாளர்கள் பழக்கடை, பேக்கரி, இனிப்பகம் உள்ளிட்ட பல்வேறு கடை களில் ஆய்வு செய்தனர்.
நெல்லை:
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் அதற்கு மாற்றாக பயோபிளாஸ்டிக் பொரு ட்களை பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள கடைகளில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
25 கிலோ
தச்சநல்லூர் மண்டல சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் பணியாளர்கள் பழக்கடை, பேக்கரி, இனிப்பகம் உள்ளிட்ட பல்வேறு கடை களில் ஆய்வு செய்தனர்.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய வியாபாரிகளிடம் இருந்து 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து இது போன்று இனி பயன்படுத்த கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது.
இதனால் சில இடங்களில் வியாபாரிகளுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.