என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையின் இரு புறங்களிலும் மண் துகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வரும் காட்சி.
தருமபுரி- சேலம் நெடுஞ்சாலையில் குவிந்துள்ள மண் துகள்களை அகற்றி வேறு இடத்தில் கொட்ட கோரிக்கை
- நெடுஞ்சாலை பணியாளர்கள் மணல் துகள்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
- மண் துகள்கள் திரும்பவும் சென்டர் மீடியன் பகுதியில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.
தருமபுரி,
தருமபுரியில் முக்கிய சாலைகளில் ஒன்றாக தருமபுரி- சேலம் நேதாஜி பைபாஸ் சாலை உள்ளது. இந்த முக்கிய சாலையில் மழைக்காலத்தில் அடித்து வரப்பட்ட மண் துகள்கள் தருமபுரி 4 ரோட்டில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை சென்ட்ரல் மீடியன் இரு புறங்களிலும் குவிந்துள்ளது.
இந்த துகள்கள் ஈரப்பதத்தில் இருந்து காய்ந்து, பிறகு கனரக வாகனங்கள் செல்லும்போது எதிர் திசையில் வேகமாக வரும் காற்றில் கலந்து இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கண்களில் விழுவதால் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்ததை அடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் சென்டர் மீடியன் ஓரத்தில் உள்ள மணல் துகள்களை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதை அடுத்து பணிகள் தொடங்கப்பட்டு நெடுஞ்சாலை பணியாளர்கள் மணல் துகள்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த மண் துகள்களை எடுத்து அங்கிருந்து அகற்றாமல் மீண்டும் ரோட்டின் ஓரத்திலேயே கொட்டுவதால் அந்த மண் துகள்கள் திரும்பவும் சென்டர் மீடியன் பகுதியில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் பணியை துரிதப்படுத்தி மண் துகள்களை வேறு இடத்தில் கொண்டு போய் கொட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.






