search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி சாலையில் 6 இடங்களில் வேகத்தடை
    X

    ஊட்டி சாலையில் 6 இடங்களில் வேகத்தடை

    • சமூக ஆர்வலர்கள் வரவேற்பு.
    • வனத்துறையினர் சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டது.

    ஊட்டி

    மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் வாகனங்கள் மூலம் வன விலங்குகளுக்கு ஏற்படும் விபத்துக்களை தடுக்க 6 இடங்களில் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சார்பில் வேகத்தடைகள் அமைக்க ப்பட்டது.

    மலைகளின் அரசியான ஊட்டிக்கு மேட்டுப்பா ளையத்தில் இருந்து குன்னூர், கோத்தகிரி சாலை வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் இச்சாலைகளில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    தற்போது ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருவதால் அதனை ரசிப்பதற்காக இளம் தம்பதியினர் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இதனால் குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே வருகிறது.

    இந்நிலையில் யானை, காட்டெருமை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டம் காரணமாக மலை ப்பாதைகளில் கவனத்து டனும், மெது வாக இயக்கும் படியும் வனத்து றையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களில் அடிபட்டு மான் உள்ளிட்ட அரியவகை வனவிலங்குகள் அடிபட்டு இறப்பதும், ஊனமாவதும் அடிக்கடி நிகழ்கின்றன.

    இதனை கருத்தில் கொண்டு ஊட்டி சாலையில் வனவிலங்குகள் சாலையை கடக்கும் பகுதிகள் கடந்த 3 மாதங்களாக கண்காணிக்கப்பட்டன. அதேவேளையில் உயிரி ழக்கும் இடங்கள் குறித்தும் தீவிரமாக கண்காணித்ததில் ஊட்டி சாலையில் 6 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த இடங்களில் வேகத்த டைகள் அமைக்க மேட்டு ப்பாளையம் வனச்ச ரகர் ஸ்டாலின், மாவட்ட வன அலுவலர் அசோக்கு மாருக்கு பரிந்துரைத்தார்.

    பின்னர் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் நெடுஞ்சாலைத்துறை யினருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    எனினும் நெடுஞ்சா லைத்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று விசார ணைக்கு வந்த நிலையில் ஊட்டி சாலையில் வேகத்தடைகள் அமைக்க உத்தரவிடப்பட்டது.

    இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் ஐகோர்ட்டு உத்தரவின் படி நேற்று ஊட்டி சாலையில் மொத்தமாக 6 இடங்களில் வேகத்தடைகள் அமைத்தனர்.

    இதனை அனைத்து சமூக ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர்.

    Next Story
    ×