என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சட்டைநாதர் கோவில் குடமுழுக்கையொட்டி பன்னிரு திருமுறைகள் முற்றோதுதல் நிகழ்ச்சி
- 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 24-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
- நூற்றுக்கணக்கான அடியார்கள் தினமும் 18 ஆயிரம் பன்னிரு திருமுறைகளை முற்றோதுகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது.
திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.
இக்கோயிலில் அமைந்துள்ள மலை கோயிலில் தோணி யப்பர் ,உமாமகேஸ்வரி சட்டநாதர் ஆகிய சுவாமிகள் மூன்று நிலைகளில் காட்சி தருகின்றனர்.
திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய பிரசித்தி பெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு 24ஆம் தேதி மிகவும் விமர்சையாக நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஏற்பாட்டின் படி நடைபெறும்.
திருப்பணிகளை அடுத்து யாகசாலை அமைப்பதற்கு மேற்கு கோபுரம் வாசல் நந்தவனப் பகுதியில் பள்ளம் வெட்டிய போது 493 தேவாரம் தாங்கிய செப்பேடுகள் மற்றும் 22 ஐம்பொன் சுவாமி விக்கிர கங்கள் கிடைக்கப்பெற்றது.
கும்பாபிஷேகம் பணிகள் நடைபெறும் போது இவ்வாறு சுவாமி சிலைகள், செப்பேடுகள் கிடைத்த தகவல் பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி தருமபுரம் ஆதீனம் ஏற்பா ட்டின் படி திருஞானசம்பந்தர் சந்நிதியில் பன்னிரு திருமுறைகள் முற்றோதுதல் தொடங்கி நடைபெறுகிறது.
தமிழகம் எங்கும் உள்ள பலநூறு அடியார்கள் பங்கேற்று 18000 பன்னிரு திருமுறைகளை நாள்தோறும் முற்றோது கின்றனர். இதனை தருமபுரம் ஆதீனம் குரு மகா சன்னிதானம் தொடங்கி வைத்தார்.
அடியார்களுடன் தருமபுரம் ஆதீன மடத்து கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டவர்களும் ஓதுவார் மூர்த்திகளும் பன்னிரு திருமுறைகளை முற்றோதுதலில் பங்கேற்றுள்ளனர்.
இதில் தமிழ்சங்க தலைவர் மார்கோனி, துணைத்தலைவர் கோவி.நடராஜன், திருக்கோவில் பாதுகாப்பு பேரவை பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.