என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒப்பிலியப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி யாகசாலை பூஜைகள் தொடக்கம்
- இன்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
- வருகிற 29-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
திருநாகேஸ்வரம்:
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் வெங்கடாசலபதி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். வருகிற 29-ந் தேதி வெங்கடாசலபதி கோவில், வடக்கு வீதியில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு நேற்று மாலை கோவில் வளாகத்தில் 28 வேதிகைகள், 34 ஹோம குண்டங்கள் என பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150 வேத விற்பன்னர்கள் வருகை தந்து நான்கு வேதங்களும் படித்தனர்.
பின்னர், இரவு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முதல்கால யாகசாலை பூஜையில் பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன், அரசு குரூப்ஸ் தலைவர் திருநாவுக்கரசு, இ.பி. சில்க்ஸ் இ.பி. சேதுராமன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கீதா வீரகுமார், அபிராமி கார்த்திகேயன், பாலச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் மகேஸ்வரி துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது, பின்னர், மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.