என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை கடும் உயர்வு மல்லிகைப்பூ 1 கிலோ ரூ.1000-க்கு விற்பனை
- மார்க்கெட்டில் இன்று காலை விவசாயிகள் அதிக அளவில் பூக்களை கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர்.
- விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை தற்போது உயர்ந்துள்ளது.
சேலம்:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.
குவிந்த மக்கள்
இதையொட்டி சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தற்காலிக வ.உ.சி. மார்க்கெட்டில் இன்று காலை விவசாயிகள் அதிக அளவில் பூக்களை கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர். இதனை வாங்க சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள்மற்றும் பொது மக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.
தொடர்ந்து போட்டி, போட்டு பூக்களைஅதிக அளவில் வாங்கி சென்றனர். இதனால் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று 800 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று ஒரு கிலோ 1000 ரூபாயாக உயர்ந்தது. மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதன் விலை விவரம் வருமாறு:-
முல்லை ஒரு கிலோ 600, ஜாதிமல்லி 280, காக்காட்டான் 400, கலர் காக்காட்டான் 360, சம்பங்கி 140, அரளி 260, மஞ்சள் அரளி, செவ்வரளி 300, நந்தியாவட்டம் 250 ரூபாய்க்கும் விற்பனையானது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை தற்போது உயர்ந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பூக்கள் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.