search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
    X

    வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

    • வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
    • பிலுகுண்டுலு அரசு தலைமை ஆசிரியர் பிலிகுண்டுலுவில் வசித்துவரும் மலைவாழ் மக்கள் மற்றும் வனங்களின் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம் காவேரி தெற்கு வனஉயிரின சரணாயலம் அஞ்செட்டி வனச்சரகம் காவிரி கரையோரம் அமைந்துள்ள பிலிகுண்டுலு சூழல் சுற்றுலா மையத்தில் அஞ்செட்டி, கேரட்டி மற்றும் பிலிகுண்டுலு கிராமங்களில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று வரும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வனம் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    அரசு பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் வனத்துறை வாகன ங்களில் அழைத்து வரப்பட்டனர்.

    முகாமில் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள பல்வேறு வகையான வன உயிரினங்களின் வகைகள், அவைகளினால் ஏற்படும் பயன்கள் மற்றும் அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்து ஓசூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன் மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார்.

    மேலும் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தின் சிறப்பு, அங்கு வாழ்ந்து வரும் வன உயிரினங்கள் மற்றும் அவைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து அஞ்செட்டி வனச்சரக அலுவலர் சீதாராமன் விவரித்தார்.

    பிலுகுண்டுலு அரசு தலைமை ஆசிரியர் பிலிகுண்டுலுவில் வசித்துவரும் மலைவாழ் மக்கள் மற்றும் வனங்களின் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.

    அன்புக்கரங்கள் அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவியுடன் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டிகள், ஓவிய போட்டிகள், யோகா பயிற்சி, ஓரிகாமி மூலம் தாள்களில் பொம்மைகள் செய்தும் வனங்களை பாதுகாப்பது குறித்து விளக்கப்பட்டது.

    மேலும் தென்னிந்தியாவில் வாழும் பறவைகளை இனங்கண்டறிதல் தொடர்பான கையேடுகள் வழங்கப்பட்டு விளக்கப்பட்டது. அத்துடன் மாணவ, மாணவிகளுக்கு தேவையான பேனா, பென்சில், கலர் பென்சில்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான படிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட சுமார் 100 அரசு பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு பின்னர் வனத்துறை வாகனத்தில் பாதுகாப்பாக அவர்களது பகுதிக்கு அழைத்துச்சென்று விடப்பட்டனர்.

    Next Story
    ×