என் மலர்
உள்ளூர் செய்திகள்
கடும் பனிப்பொழிவால் குட்டி காஷ்மீர் போல காட்சியளிக்கும் ஊட்டி
- தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம்.
- குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனிக்காலம் ஆகும். ஆனால் நடப்பாண்டு புயல் மழை காரணமாக ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது. இதனால் ஊட்டி, காந்தல், தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் தென்படுகிறது.
அங்கு கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டியில் அவலாஞ்சி, தலைகுந்தா, காந்தள் பகுதிகளில் இன்று காலை முதல் கடும் உறை பனி நிலவி வருகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெள்ளை கம்பளம் விரித்தாற்போல காணப்படுகிறது. மேலும் பச்சை புல்வெளிகள் மற்றும் வாகனங்களில் பனிப்படலத்தை பார்க்க முடிகிறது.
சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள், புல்வெளிகளில் படர்ந்துள்ள பனிகளை கையில் எடுத்து விளையாடி வருகின்றனர்.