என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனைக்கு கூடுதலாக 2 கவுன்டர்கள் திறப்பு
- நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையானது தென்மாவட்டங்களில் உள்ள பிரதான மருத்துவமனை ஆகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
- காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நோயாளிகளின் உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதலாக 2 கணினிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
நெல்லை:
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையானது தென்மாவட்டங்களில் உள்ள பிரதான மருத்துவமனை ஆகும். இங்கு தினமும் ஆயிரக்க ணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
2,400 படுக்கைகள்
இந்த ஆஸ்பத்திரியில் சுமார் 2,400 படுக்கை வசதிகள் உள்ளன. இவற்றில் நெல்லை, தென்காசி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பலதரப்பட்ட சோதனைகளுக்கும் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே தனித்தனி கட்டிடங்கள் அமைக்கப்பட்டு அங்கு பரிசோதனைகள் நடை பெற்று வருகிறது.
தாமதமான முடிவு
இந்நிலையில் நோயாளிகளின் ரத்தத்தை பரிசோதனைக்காக பெறுவதிலும், அதற்கான முடிவுகளை அறிவிப்பதிலும் மிகவும் தாமதம் ஏற்படுவதாக நோயாளிகள் புகார் கூறுகின்றனர்.
இந்த பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு நோயாளிகளின் உறவினர்கள் காலை முதல் இரவு வரை பசியோடு வெயிலில் காத்து கிடக்கும் நிலை இருப்பதாக புகார்கள் வந்ததையடுத்து கணினி மூலமாக விரைவாக பரிசோதனை முடிவுகளை அறிவிக்க மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
எம்.எல்.ஏ. ஆய்வு
ஆனாலும் ஒரே ஒரு கவுன்டர் மட்டுமே இருந்ததால் பரிசோதனை முடிவு தாமதமாகவே வழங்கப்பட்டு வந்தது. தொடர் புகாரால் சமீபத்தில் பாளை தொகுதி எம்.எல்.ஏ. அப்துல் வகாப் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆய்வு செய்து பரிசோதனை முடிவுகளை விரைந்து வழங்க கூடுதல் கவுன்டர்கள் திறக்க அறிவுறுத்தினார்.
இந்நிலையில் மருத்து வக்கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் தற்போது கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து டீன் ரவிச்சந்திரன் கூறியதாவது:-
கூடுதல் கவுன்டர்கள் திறப்பு
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தகவல் மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் தமிழகத்திலேயே இந்த ஆஸ்பத்திரி முதல் இடம் வகிக்கிறது. ஆஸ்பத்திரியில் அனுமதி சீட்டு வழங்குதல், மருத்துவர்கள் மருந்து பரிந்துரை செய்வது, ரத்த பரிசோதனை பதிவு செய்தல், முடிவுகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு உள்ளன. இதனால் இனி ரத்த பரிசோதனை செய்யப்படும் அதே நேரத்தில் டாக்டர்கள் இணையவழி மூலமாக ரத்த பரிசோதனை முடிவுகளை காணலாம்.
எனவே தேவையற்ற காலதாமதம் இனி ஏற்படாது. ரத்த பரிசோதனை செய்வதற்காக பதிவு செய்யும் பகுதியில் தற்போது 3 கணினிகள் இயங்கி வருகிறது.
இங்கு காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நோயாளிகளின் உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதலாக 2 கணினிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பரிசோதனை முடிவு விரைவாக கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்