என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு- கலெக்டர் கிராந்திகுமார் தகவல்
- 3 நாட்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2306051.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இருந்து வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் செல்ல உள்ளனர்.
இதன் காரணமாக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் வருகிற 11-் தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
எனவே பயணிகள் கூட்ட நெரிசலினறி இந்த பஸ்களில் பயணித்து கொள்ளலாம். மேலும் பயணிகள் ஆம்னி பஸ்களில் அதிக கட்டண வசூல் அல்லது போக்குவரத்து நெரிசல் குறித்தும் புகார் செய்ய கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று முதல் வருகிற 11-ந் தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் வகையில் கட்டுபாட்டு அறை பொதுமக்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2306051. மேலும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் அது குறித்து 9384808304 வாட்ஸ் அப் மூலம் புகார் அனுப்பலாம் .
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






