search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில்  காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு
    X

    பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியினை கலெக்டர் தீபக்ஜேக்கப் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு

    • பனங்கிழங்கு பொடி, கதர் பொருட்கள், காதி சோப்பு, வகைகள் என பல பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் இப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் - கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியினை கலெக்டர் தீபக் ஜேக்கப் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கதர் கிராம பொருட்கள் மற்றும் பனைப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும், மக்களிடையே பனைப் பொருட்களைப் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதற்கட்டமாக விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டிணம், இராணிப்பேட்டை, வேலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய 10 மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியினை தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.

    அதனடிப்படையில் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பனைப் பொருட்கள் மற்றும் காதி கிராப்ட் கைவினைப் பொருட்கள் விற்பனை அங்காடி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இங்கு பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், பனம்பழச்சாறு, சுக்குகாபி, பனை ஓலைப் பொருட்கள், சுக்கு காபித் தூள், பனங்கிழங்கு பொடி, பதநீர், பனங்கருப்பட்டி, கதர் பொருட்கள், காதி சோப்பு, வகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட வைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கையாக விளையும் பனை பொருட்களைக் கொண்டு, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக இவ்வங்காடி விற்பனைக்காக தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், தஞ்சாவூர் கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் ப்ரான்ஸீஸ் தெரஸா மேரி, மேலாளர் சாவித்திரி, பனைப்பொருள் பெருவளத்திட்டம் திட்ட அலுவலர் மாரியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×