என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
- ரெயில் நிலையத்தின் வளாகத்திலோ,ரெயில் பெட்டிக்குள்ளோ புகை பிடிக்க கூடாது.
- ரெயில் பெட்டியில் கற்பூரம், தீபம் போன்றவற்றை ஏற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
சபரிமலை அய்யப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் கூடுதலாக சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படிடதராபாத் - கொல்லம் இடையே வரும் 29ந் தேதியும், மறுமார்க்கமாக கொல்லம் -ஹைதராபாத் இடையே 31ந் தேதியும் சிறப்பு ரெயில் (07177) இயங்கும்.
நரசப்பூர் - கண்Èர் இடையே 27ந் தேதி மற்றும் 31ந் தேதி சிறப்பு ரெயில் (07178) இயங்கும். மறுமார்க்கமாக கண்Èரில் இருந்து, 28ந் தேதி மற்றும் ஜனவரி 1ந் தேதி புறப்படும். செகந்திராபாத் - கொல்லம் சிறப்பு ரெயில் (07180) வரும் 28ந் தேதியும், மறுமார்க்கமாக கொல்லம் - செகந்திரபாத் ரெயில் (07181) 29ந் தேதியும் இயங்கும்.
ரெயில்களும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், திருவல்லா, செங்கனூர், காயன்குளம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ரெயில்வே நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:- ரெயிலில் பயணிக்கும் பொழுது, எளிதில் தீப்பிடிக்க கூடிய மற்றும் அபாயகரமான பொருட்களை கொண்டு செல்ல கூடாது. ரெயில் நிலையத்தின் வளாகத்திலோ,ரெயில் பெட்டிக்குள்ளோ புகை பிடிக்க கூடாது.
ெரயில் பெட்டியினுள் மற்றும் ரெயில் நிலையத்தில் 'ஸ்டவ்' மற்றும் மின் அடுப்பு போன்றவற்றை கொண்டு சமையல் செய்ய கூடாது. கற்பூரம், தீபம் போன்றவற்றை ரெயில் பெட்டியினுள் ஏற்றுதல் கூடாது. இரவு நேர பயணங்களின் போது செல்போன் சார்ஜ் செய்வதை தவிர்க்கவும்.
இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
ரெயில்வே பாதுகாப்பு படையினர் கூறுகையில், ரெயிலில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வழக்கமாக வெளியிடப்படும் விழிப்புணர்வு விதிமுறை தான். தற்போது சபரிமலை சீசன் என்பதால், அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் ரெயிலில் பயணிக்கின்றனர். ரெயில் பெட்டியில் கற்பூரம், தீபம் போன்றவற்றை ஏற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வகையில் புதிய கட்டுப்பாடுகள் எதுவுமில்லை என்றனர்.






