search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண் மருத்துவ முகாம்
    X

    மருத்துவ முகாம் நடந்தது.

    கண் மருத்துவ முகாம்

    • முகாமில் 496 பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
    • அனைவருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறித்து பரிசோதிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    கோட்டூர் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி சார்பில் பொது மற்றும் கண் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. மதுரை மீனாட்சி மிசன்,தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர்.

    முகாமிற்கு நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன் முகாமை தொடங்கி வைத்தார்.முகாமில் 496 பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்,

    அனைவருக்கும் ரத்த அழுத்தம் ,சர்க்கரை அளவு குறித்து பரிசோதிக்கப்பட்டது, தேவைபடுவோருக்கு ஈ.சி.ஜி எடுக்கப்பட்டது. அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. பங்கேற்ற முதியோர்கள் 40 பேருக்கு கைத்தடிகள் வழங்கப்பட்டது.கண்ணாடி தேவை படும் சுமார் 205 பேருக்கு கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    முகாமில் ஊராட்சி தலைவர்கள் சுஜாதா பாஸ்கரன் தமிழ்செல்வி வேல்முருகன்,திலகவதி சிவசுப்ரமனியன், தேவகி உதயகுமார், ஓ.என்.ஜி.சி மருத்துவ அலுவலர் கனேஷ்குமார், உற்பத்தி பிரிவு தலைவர் வில்சன், ஏரியா பொது மேலாளர் சரவணன்,முத்துகுமார், நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி மகேந்திரன், துணைத்தலைவர் வனஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் நல்லூர், களப்பால், வாட்டார், வெங்கத்தான்குடி, அக்கரைகோட்டகம், பைங்காட்டூர், பனையூர் போன்ற ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    முகாமை ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்பு திட்ட அலுவலர்கள் கார்த்திகேயன், முருகானந்தம் ஒருங்கிணைத்தனர். முகாமை கடலூரை சேர்ந்த முதியோருக்கான முதியோர் அமைப்பு ஏற்று நடத்தியது.

    Next Story
    ×