search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பி.ஆர். செவிலியர் கல்லூரியில்   சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்
    X

    ஓ.பி.ஆர். செவிலியர் கல்லூரியில்   சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்.

    வட

    ஓ.பி.ஆர். செவிலியர் கல்லூரியில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்

    • அருட்செல்வர் கலையரங்கில் நடைபெற்றது. இதற்கு சைபர் குற்ற இன்ஸ்பெக்டர்கவிதா தலைமை தாங்கினார்.
    • ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் செயலாளரும் தாளாளருமான டாக்டர். இரா.செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    வடலூர் ஓ.பி.ஆர். நினைவு செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் அருட்செல்வர் கலையரங்கில் நடைபெற்றது. இதற்கு சைபர் குற்ற இன்ஸ்பெக்டர்கவிதா தலைமை தாங்கினார். ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் செயலாளரும் தாளாளருமான டாக்டர். இரா.செல்வராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை ஓ.பி.ஆர். நினைவு கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் லதா ராஜாவெங்கடேசன் ஒருங்கிணைந்து விளக்கவுரையாற்றினார். இதில் உதவிப் பேராசிரியர்கள் மலர்விழி, நித்தியபிரியா, மங்கலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கடலூரில் நடைபெற்ற சைபர் குற்ற கருத்தரங்கில் பங்கேற்ற, வடலூர் ஓ.பி.ஆர். நினைவு செவிலியர் கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளான சந்தோஷிகா, செல்வராணி, நந்தினி, கனிமொழி, கார்மேல் நிர்மல் ரோஷி, லாவன்யாஸ்ரீ, மரியா பாஷ்டினா ஆகியோர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×