search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனமழையால் கொள்முதல் நிலையத்திலுள்ள நெல் மூட்டைகள் நனைந்து நாசம்
    X

    நெல் மூட்டைகளை தார்பாய் கொண்டு மூடிவைத்துள்ள விவசாயிகள்.

    கனமழையால் கொள்முதல் நிலையத்திலுள்ள நெல் மூட்டைகள் நனைந்து நாசம்

    • 4 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டது.
    • சுமார் 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்படைந்துள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டு கடந்த 15 நாட்களாக அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக திருத்துறைப்பூண்டி, பாண்டி, கீழப்பாண்டி, கீழப்பெருமலை, மேலப்பெ ருமலை, தில்லைவிளக்கம் புத்தகரம், உதய மார்த்தாண்டபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் கீழப்பெருமலை பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்படைந்துள்ளது.

    இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகளை தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

    Next Story
    ×