என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் இந்தி திணிப்புக்கு எதிராக துண்டு பிரசுரம்- அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
    X

    அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் இந்தி திணிப்பு எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை வழங்கிய காட்சி.

    தூத்துக்குடியில் இந்தி திணிப்புக்கு எதிராக துண்டு பிரசுரம்- அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த என்று உத்தரவிட்டு இருந்தார்
    • அமைச்சர் கீதாஜீவன் வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்

    இதையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் மாநகர பகுதியான 26, 27வது வார்டுக்குட்பட்ட எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட், மார்கெட் ரோடு, எஸ்.எஸ்.பிள்ளை தெரு, வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெரு, யாதவர் தெரு, செயின்ட்ஜான் தெரு, வடக்கு வானியன்விளை, தெற்கு வானியன்விளை, உள்பட பல்வேறு பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.

    இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், திரேஸ்புரம் பகுதி தி.மு.க. செயலாளரும் மாநகராட்சி மண்டலத் தலைவருமான நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் சரண்யா, மரியகீதா, மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் டைகர் வினோத், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வின், வட்டப் பிரதிநிதிகள் ஏகாம்பரம், ஜெயக்குமார், அவைத் தலைவர்கள் திருமணி, மாயாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×