search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாப்பிள்ளையூரணி ஊராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - கலெக்டரிடம், ஊராட்சி தலைவர் கோரிக்கை
    X

    மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், கலெக்டர் செந்தில்ராஜ்யிடம் கோரிக்கை மனு அளித்த காட்சி.

    மாப்பிள்ளையூரணி ஊராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - கலெக்டரிடம், ஊராட்சி தலைவர் கோரிக்கை

    • மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் சுமார் 1 1/2லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
    • இங்குள்ள பிரதான சாலையில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், கலெக்டர் செந்தில்ராஜ்யிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் சுமார் 1 1/2லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பிரதான சாலையில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது.இது குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.குறிப்பாக தாளமுத்துநகர் மெயின்ரோடு, தாளமுத்துநகர் முதல் சவேரியார்புரம் வரை, சிலுவைபட்டி விலக்கு முதல் டேவிஸ்புரம் வரை,மாதாநகர் முதல் வண்ணாரப்பேட்டை வரை மற்றும் ராஜபாளையம் முதல் சோட்டையன் தோப்பு வரையிலான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது.இந்த சாலைகளில் சமீபத்தில் நடந்த விபத்துக்களினால் கல்லூரி மாணவர் ஒருவரும், பள்ளி மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

    எனவே இந்த சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    Next Story
    ×