search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழாவை யொட்டி தேரில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
    X

    தேரில் பந்தக்கால் நடப்பட்டது.

    தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழாவை யொட்டி தேரில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

    • முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.
    • பந்தகாலுக்கு மஞ்சள், பால், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி தஞ்சை பெரிய கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.

    தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 வீதிகளில் தேர் வலம் வரும்.

    தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை மேல வீதியில் உள்ள தேர்நிலையில் உள்ள தேரில் பந்தக்கால் முகூர்த்தம் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பந்தகாலுக்கு மஞ்சள், பால், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து தேரில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ரெங்கராஜ், முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×