search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா
    X

    புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த மாரியம்மன்.

    வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா

    • முக்கிய நிகழ்ச்சியான புஷ்ப பல்லக்கு வீதிஉலா காட்சி நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே திருவையாறு அடுத்த வீரசிங்கப்பட்டியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த 26 ஆம் தேதி காப்பு கட்டுதல் பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான புஷ்ப பல்லாக்கு வீதி உலா காட்சி நடைபெற்றது. மாரியம்மன் பூ அலங்காரத்துடன் புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதேபோல் கருப்புசாமி, மதுர வீரன் , நொண்டி கருப்பு ஆகிய பரிவார தெய்வங்களும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முக்கிய வீதிகளில் வழியாக பல்லாக்கு வீதி உலா சென்று மீண்டும் சன்னதியை வந்தடைந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    Next Story
    ×