search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி அருகே அய்யனார் கோவில் பங்குனி திருவிழா கால்கோல் நிகழ்ச்சி
    X

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கால்கோல் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

    உடன்குடி அருகே அய்யனார் கோவில் பங்குனி திருவிழா கால்கோல் நிகழ்ச்சி

    • அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
    • ஏற்பாடுகளை கல்லால் அய்யனார் கோவில் அறக்கட்டளை தலைவர் ராம்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், விழாக் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள கூழையன்குண்டு கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான அல்லி ஊத்து கல்லால் அய்யனார் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கால்நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பங்குனி உத்திர திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்கு கிறது. இதையொட்டி அன்று மாலை 3மணிக்கு அல்லி ஊத்தில் இருந்து மேள தாளத்துடன் தீர்த்த குடம் கோவிலுக்கு எடுத்து வருதல், மாலை 4 மணிக்கு குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரையில் இருந்து கோவில் அறக்கட்டளை தலைவர் ராம்குமார் தலைமையில் தீர்த்தம் எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை நடக்கிறது.

    வருகிற 5-ந்தேதி அதிகாலை 5 மணி முதல் மங்கள இசை, மகா கணபதி ஹோமம், கல்லால் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாகுதி காலை 7 மணிக்கு பால்குடம் பவனி, 8 மணிக்கு வைத்தி யலிங்க சுவாமி, கல்லால் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா அபிஷேகம், காலை 9 மணிக்கு சுவாமிகளுக்கு அலங்கார பூஜை, 10 மணிக்கு வில்லிசை, பிற்பகல் 12 மணிக்கு விஷேச தீபாராதனை, மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு நகைச்சுவை இசைப்பட்டி மன்றம், இரவு 8.30 மணிக்கு வைத்தியலிங்க சுவாமி குடியிருப்பில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு விசேஷ தீபாராதனை சுவாமி, அம்பாள் அனுக்கிரக பூஜை நடக்கிறது.

    வருகிற 6-ந்தேதி காலை 10 மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு பத்திரகாளி அம்மன் மஞ்சள் நீராடுதல், பகல் 12.30 மணிக்கு மேள தாளம் முழங்க பத்திரகாளி அம்மன் பரிவார தேவதை களுடன் அல்லி ஊத்தில் நீராடுதல், மாலை 5.30 மணிக்கு சுடலைமாடன் சுவாமிக்கு அபிஷேகம் தொடக்கம், இரவு 7 மணிக்கு திரைப்பட கச்சேரி நடக்கிறது.

    இரவு 8.30 மணிக்கு வில்லிசை, இரவு 10மணிக்கு கனியான் கூத்து, நள்ளிரவு 12 மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு ஜாம பூஜை, சுவாமி பரிவாரங்களுடன் தில்லைவனம் சென்று வருதல், வருகிற 7-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு காலம்மை நாடாச்சி அம்மனுக்கு சிறப்பு பொங்க லிட்டு விசேஷ படைப்பு களுடன் அலங்கார பூஜை, அதிகாலை 5 மணிக்கு சுடலைமாடன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங் களுக்கு நிறைவு பூஜையுடன் திருவிழா நிறைவுபெறு கிறது.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    ஏற்பாடுகளை கல்லால் அய்யனார் கோவில் அறக் கட்டளை தலைவர் ராம் குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், விழாக் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×