என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாகை சவுந்தரராஜபெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்29 March 2023 2:48 PM IST
- ஸ்ரீதேவி பூதேவி சமேத சவுந்தரராஜபெருமாள் கோவிலை சுற்றி வீதி உலா நடைபெற்றது.
- திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடி ஏற்றப்ட்டது.
நாகப்பட்டினம்:
நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது நாகப்பட்டிணம் சௌந்தரராஜ பெருமாள் ஆலயம் 108 திவ்யதேசங்களில் 19வது திவ்யதேசமாகும்.
இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக ஸ்ரீதேவி மூதேவி சமேத சௌந்தரராஜபெருமாள் கோவிலை சுற்றி வீதி உலா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஆலய முன்பு உள்ள கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷங்கள் எழுப்பினர் அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×