search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பங்குனி உத்திர தேரோட்டம் முடிந்தும் பழனியில் குவியும் பக்தர்கள்
    X

    பழனி அடிவாரம் வெளிப்பிரகாரத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.


    பங்குனி உத்திர தேரோட்டம் முடிந்தும் பழனியில் குவியும் பக்தர்கள்

    • பங்குனி உத்திர தேரோட்டம் முடிந்த பின்னரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • தினமும் இரவு 7 மணிக்கு தங்கரதத்தில் சின்ன குமாரசாமி புறப்பாட்டை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    பழனி:

    தமிழ்கடவுள் முருக ப்பெருமானின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடு களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா க்கோலம் பூண்டிருக்கும் பழனியில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

    தைப்பூச திருவிழாவிற்கு அடுத்தபடியாக பங்குனி உத்திரம் அதிவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பக்தர்கள் கொடுமுடி உள்பட பல்வேறு பகுதி களில் இருந்து தீர்த்தகாவடி எடுத்துவந்து முருகனை வழிபட்டு வருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான பங்குனிஉத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சி யான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து தீர்த்தக்காவடிகள் எடுத்து வந்த பக்தர்கள் கிரிவீதியில் ஆடிய காட்சி காண்ப வர்களை பரவசமடைய செய்தது. தற்போது பங்குனி உத்திர தேரோட்டம் முடிந்த பின்னரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இதனால் அடிவாரம், மலைக்கோவில், வின்ச், ரோப்கார் நிலையத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேலும் மலைக்கோவிலில் சுமார் 3 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் அன்னதானத்திற்கும் நீண்டவரிசையில் காத்திருந்தனர். தற்போது 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிருவாரங்களில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்படும்.

    அப்போது பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழனி செல்லும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதில் தங்கரத புறப்பாடு முக்கிய நிகழ்ச்சியாகும். பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி கடந்த 2-ந்தேதி முதல் இன்றுவரை தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில்நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டி ருந்தது.

    அதன்படி கடந்த 5 நாட்களாக சாமி தங்கரத புறப்பாடு நடைபெற வில்லை. நாளை(7-ந்தேதி) முதல் வழக்கம்போல் மலைக்கோவில் வெளி பிரகாரத்தில் தங்கரதபுற ப்பாடு நடைபெறுகிறது. தினமும் இரவு 7 மணிக்கு தங்கரதத்தில் சின்ன குமாரசாமி புறப்பாட்டை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×