search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்- விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்
    X

    கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார்.

    காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்- விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

    • வேளாண் கல்லூரி, மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும், நடமாடும் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
    • விவசாயத்தை கேள்விக்குறியாக்கும் மணல் குவாரிகளை மூட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் செம்பனார்கோவில் மேல முக்கூட்டில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பொதுக்கூட்டமும், கீழமுக்–கூட்டிலுள்ள வரத ராஜன் நினைவரங்கில் மயிலாடுதுறை மாவட்ட 30-வது மாநாடு தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது.

    2-வது நாள் மாநாட்டில் தலைமைக்குழு தேர்வுக்கு பிறகு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் நாகையா கொடியினை ஏற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் மேகநாதன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் டி.சிம்சன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியிமாநிலக்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நாகை மாலி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

    அரசியல், ஸ்தாபன, வேலையறிக்கையை மாவட்ட செயலாளர் துரைராஜ், வரவு-செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் வைரவன் ஆகியோர் வாசித்தனர். விவாதங்கள், தொகுப்புரை, புதிய கமிட்டி தேர்வு, மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வுக்கு பிறகு மாநாட்டு தீர்மானங்களை மாவட்ட துணை செயலாளர் ராயர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இளங்கோ வன், ராமலிங்கம் ஆகியோர் முன்மொழிந்தனர்.

    வைக்கோலை பயன்படுத்தி காகிதம் தயாரிக்கும் தொழிற்சா லையை மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்க வேண்டும். வேளாண் கல்லூரி, மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும், நடமாடும் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகும் மீத்தேன் உள்ளிட்ட இயற்கை வளங்களை எடுப்பது, ஓ.என்.ஜி.சி. கெயில் குழாய்கள் பதிப்பது போன்ற திட்டங்களை கைவிட வேண்டும், விவசாயத்தை கேள்விக்குறியாக்கும் மணல் குவாரிகளை மூட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரவீந்திரன் மாநாட்டை வாழ்த்தி பேசினர். பொருளாளராக செல்லப்பா, துணைத்தலை வர்களாக வைரவன், குணசுந்தரி, துணை செயலா ளர்களாக இளங்கோவன், மேகநாதன் உள்ளிட்டோர் அடங்கிய 23 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் தேர்வு செய்ய ப்பட்ட புதிய நிர்வாகிகளை அறிவித்து மாநில செயலாளர் சாமி நடராஜன் நிறைவுரை யாற்றினார். இறுதியாக வரவேற்புக்குழு செயலாளர் கே.பி.மார்க்ஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×