என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பரமன்குறிச்சி பார்வதி அம்மன் கோவில் கொடை விழா
- பரமன்குறிச்சி பார்வதி அம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது.
- 3-ம் நாள் காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு உணவுசமைத்தல், மதியம் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் கொடை விழா நிறைவு பெற்றது.
உடன்குடி:
பரமன்குறிச்சி பார்வதி அம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது. இதன் முதல் நாள் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு மங்கையர்கரசி மாதர் மன்றத்தின் சார்பில் திருவிளக்கு வழிபாடு, இரவு 7 மணிக்கு கொலுமேளம், நாதஸ்வர இன்னிசை, இரவு 8 மணிக்கு அம்மன் திருப்பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு கற்பூர தீபாராதனை பூஜைகள் நடந்தது. 2-ம் நாள்காலை 8 மணிக்கு நையாண்டி மேளம், காலை 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பச்சை சாத்தி புஷ்ப அலங்காரத்துடன் விசேஷ கற்பூர தீபாராதனை, மாலை 6 மணிக்கு சிவனுக்கு பொங்கலிட்டு அம்மனுக்கு சிவப்பு சாத்தி அலங்காரத்துடன், கற்பூர தீபாராதனை, அம்மனுக்கு படைக்கஞ்சி வார்த்தல், இரவு 7 மணிக்கு அம்மனுக்கு பட்டு மற்றும் நேர்ச்சை பொருட்களை கொண்டு வருதல் தீபாராதனையும், இரவு 9 மணிக்கு அம்மனுக்கு விசேஷ புஷ்ப அலங்கார காட்சி தீபாராதனையும் நடந்தது.
இதில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொருளாளர் ராமநாதன், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, பரமன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், ராஜாபிரபு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் நெசவாளர்அணி செந்தில் அதிபன், வர்த்தகர்அணி மாடசாமி, மாணவரணி செந்தில், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 3-ம் நாள் காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு உணவுசமைத்தல், மதியம் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் கொடை விழா நிறைவு பெற்றது. பின்பு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் தலைவர் அப்பு (என்ற) நல்லகுட்டி, பொருளாளர் கண்ணன், செயலாளர் தினகரன், இந்து வாலிபர் சங்கத்தினர், மங்கையர்க்கரசி மாதர் மன்றத்தினர் செய்திருந்தனர்.