என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பரமத்தி வேலூர் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
- சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
- அன்னம் தயார் செய்யப்பட்டு, அதனை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
பரமத்தி வேலூர் அருகே கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, பரமேஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களால் வழங்கப்பட்ட அரிசியால் அன்னம் தயார் செய்யப்பட்டு, அதனை பரமேஸ்வரர் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது.
பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பரமேஸ்வரர் திருமேனியில் சாத்தப்பட்ட அன்னத்தை பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
சாமி மீது சாத்தப்பட்ட ஒவ்வொரு சாதமும் லிங்கமாக கருதி பொது மக்கள் வாங்கி உண்டனர். மீதமுள்ள சாதத்தை நீர்நிலைகளுக்கு கொண்டு சென்று, அங்குள்ள ஜீவராசிகளுக்கு உணவாக வழங்கினர். அன்னாபிஷேக விழாவில் கலந்து கொண்டு
இறைவனை வழிபடுபவர்க ளுக்கு வாழ்வில் வறுமை நீங்கும் என்பது ஐதீகம்.
அதேபோல், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவனுக்கு 100 கிலோ அரிசியால் செய்யப்பட்ட அன்னமும், வேலூர் செட்டியார் தெரு அருகே உள்ள எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு அன்னம் மற்றும் பல்வேறு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பரமத்திவேலூரில் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர் பாளையம் சிவன் கோவில் பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன், மாவுரெட்டி வேதநாயகி சமேத பீமேஸ்வரர், நந்திகேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்