search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேகமாக பரவும்  மர்ம காய்ச்சல் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகளுடன் குவிந்த பெற்றோர்
    X

    மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருப்போரை படத்தில் காணலாம்.

    வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகளுடன் குவிந்த பெற்றோர்

    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த காய்ச்சல் சளி, போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
    • குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    கடலூர்:

    தமிழக முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் அதிகமாக பரவி வருகிறது. இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதுகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த காய்ச்சல் சளி, போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை வழக்கத்தை விட தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தற்போது குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் பெரியவர்களும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்களும் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்று செல்லும் நிலை கடலூரில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் நிலவியுள்ளது.

    இதனையடுத்து சுகாதாரத்துறை டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் கடலூரில் பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் சிறப்பு முகம் மூலம் பொது மக்களுக்கு காய்ச்சல் சளி போன்றவை இருக்கிறதா என்பதை பரிசோதித்து அதற்கு சிகிச்சை மற்றும் இந்த காய்ச்சல் சளி பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து கணக்கு எடுத்து வருகின்றனர்.

    மேலும் நகராட்சி பேரூராட்சி தூய்மை பணியா ளர்கள் அனை வரும் தெருக்களிலும் வீதிகளிலும் கொசுவை ஒழிக்கும் விதமாக கொசு மருந்து அடிக்கவும் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட மக்களின் நலன் காக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் மற்றும் பரவி வரும் காய்ச்சலை ஒழிக்க சுகாதாரத் துறை மாவட்ட நிர்வாகம் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    Next Story
    ×