என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகளிர் குழுவினருக்கு கடன் தள்ளுபடி ஆணை வழங்கப்பட்டது.
பகுதிநேர அங்காடி திறப்பு விழா
- அத்தியாவசிய பொருள்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
- 16 மகளிர் குழுவினருக்கு ரூ.15.60 லட்சத்துக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம் இரும்புதலை அருகே தென்னஞ்சோலை கிராமத்தில் பகுதிநேர பொதுவிநியோக அங்காடி தொடக்கவிழா நடைபெற்றது.
அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை வகித்தார்.
ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், ஒன்றியகவுன்சிலர் வள்ளிவிவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இரும்புதலை ஊராட்சிமன்ற தலைவர் பாலாஜி அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு பகுதிநேர அங்காடியை திறந்து வைத்து அத்தியாவசிய பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இரும்புதலை தொடக்க வேளாண் வங்கி சார்பில் 16 மகளிர் குழுவினர்க்கு ரூ.15.60 லட்சத்துக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர் (பொதுவிநியோக திட்டம்) ஆனந்தகுமார், வட்ட வழங்கு அலுவலர் சிவக்குமார், இரும்புதலை தொடக்க வேளாண் வங்கி செயலர் சாமிநாதன், மாவட்ட கவுன்சிலர் ராதிகா, ஊராட்சி மன்ற தலைவர்கள் கிருஷ்ணவேணி கருப்பையன், கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அமானுல்லா, ஊராட்சி மன்ற துணைதலைவர் மங்கையர்கரசி, ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு வங்கி பணியாளர்கள். கிராமமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






