search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொல்லம் -கன்னியாகுமரி  மெமு ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் -பயணிகள் சங்கம் கோரிக்கை
    X

    கொல்லம் -கன்னியாகுமரி மெமு ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் -பயணிகள் சங்கம் கோரிக்கை

    • நெல்லை மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தின் மாவட்ட கமிட்டி கூட்டம் ஏர்வாடியில் நடைபெற்றது.
    • நாகர்கோவில் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தின் மாவட்ட கமிட்டி கூட்டம் ஏர்வாடியில் நடைபெற்றது. சங்கத் தலைவர் கலீல் ரகுமான் தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபு நவாஷ் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் சேகர் வரவேற்றார். பொதுச்செயலாளர் நயினா முகம்மது அறிக்கை சமர்ப்பித்தார்.

    கூட்டத்தில் துணைத்தலைவர்கள் காதர் மைதீன், லாசர், பசீர் அகம்மது, குலாம் முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட ரெயில் பயணிகள் நலன் கருதி கொல்லம், கன்னியாகுமரி மெமு ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். தென்மாவட்ட பயணிகள் நலன் கருதி கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை மார்க்கமாக மும்பைக்கு தினசரி ரெயில் விட வேண்டும், நாகர்கோவில்- நெல்லை பயணிகள் ரெயில் மேலப்பாளையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம்- நாகர்கோவில் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பொருளாளர் முகைதீன் என்ற முத்து வாப்பா நன்றி கூறினார்.

    Next Story
    ×