search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்கள் படங்களுடன் நெல்லை ரெயில் நிலையத்தில்  பயணிகளை கவரும் பத்தமடை பாய்கள்
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவம் பொறிக்கப்பட்ட பத்தமடை பாய்.

    சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்கள் படங்களுடன் நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகளை கவரும் பத்தமடை பாய்கள்

    • தென்னக ரெயில்வே சார்பில் அந்தந்த பகுதியில் பிரபலமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • ரூ.300 முதல் அவற்றின் தரத்திற்கேற்ப பாய்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    ஒரு ரெயில் நிலையம் ஒரு பொருள் என்ற திட்டத்தின் கீழ் தென்னக ரெயில்வே சார்பில் அந்தந்த பகுதியில் பிரபலமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கி மே மாதம் 8-ந் தேதி வரை இந்த விற்பனை நடைபெற்றது.

    பனை பொருட்கள் அங்காடி

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலும் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி, பனம் பழ ஜூஸ், பனை ஓலை பொருட்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    இந்த விற்பனைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்த காரணத்தினால் தற்போது மீண்டும் 2-வது முறையாக 15 நாட்களுக்கு பனை பொருட்கள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது.

    பத்தமடை பாய்கள்

    கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த விற்பனையில் ஏராளமான பயணிகள் பொருட்களை பார்வையிடுவதுடன் அவற்றை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி தற்போது உலகப் புகழ் பெற்ற பத்தமடை பாய்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பாய்கள் சாதாரணமாக இல்லாமல் அவற்றில் பல்வேறு ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.

    இயற்கை ஓவியங்கள்

    அந்த வகையில் சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கண்களை கவரும் இயற்கை ஓவியங்கள் என பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன.

    ஒரு பாயின் விலை ரூ. 300 முதல் ரூ. 10 ஆயிரம் வரை அவற்றின் தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பனையில் இருந்து கிடைக்கும் பொருட் களிலிருந்து தயாரி க்கப்படும் பொருட்கள் உள்ளிட்ட வைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவைகள் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் ெரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    இங்கு வெற்றிலைப் பெட்டி, குழந்தைகள் விளையாடும் கிலுக்கு, காய்கறிக் கூடை, விசிறி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பனை ஓலையால் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×