என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்
    X

    களக்காடு அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்

    • களக்காடு-நாங்கு நேரி சாலையில் அரசு மருத்துவ மனை அமைந் துள்ளது. இங்கு 2 மருத்துவர்கள் உள்பட செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • தினசரி 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வரும் நிலையில் 1 மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளதால் நோயாளிகள் சிகிச்சை பெற நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது

    களக்காடு:

    களக்காடு-நாங்கு நேரி சாலையில் அரசு மருத்துவ மனை அமைந் துள்ளது. இங்கு 2 மருத்துவர்கள் உள்பட செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற 30 படுக்கைகளும் உள்ளன.

    இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு இங்கு பணி புரிந்து வந்த இரு மருத்துவர்களில், ஒரு மருத்துவர் வேறு இடத்திற்கு பணி மாறுதலாகி சென்று விட்டார். அதன் பின் அந்த பணியிடத்திற்கு மருத்துவர் நியமிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் 1 மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளார். தினசரி 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வரும் நிலையில் 1 மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளதால் நோயாளிகள் சிகிச்சை பெற நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இதனால் நோயாளிகள் கடும் தவிப்பு அடைந்துள்ளனர்.

    தற்போது களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் காய்ச்சல் பரவி வருகிறது. இதை யொட்டி மருத்துவ மனைக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 1 மருத்துவர் மட்டுமே சிகிச்சை அளிப்பதால் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் தொய்வு ஏற்படுவதாக கூறப்ப டுகிறது. எனவே களக்காடு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் பணி யிடத்தை நிரப்ப வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×