என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்ற கடைகளுக்கு அபராதம் பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்ற கடைகளுக்கு அபராதம்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/24/1796871-05.jpg)
X
கடைகளில் செயல் அலுவலர் மகேஸ்வரி ஆய்வு செய்த காட்சி.
பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்ற கடைகளுக்கு அபராதம்
By
மாலை மலர்24 Nov 2022 2:56 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பிள்ளா நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
- அப்போது, கடைகளில் விற்பனை, பயன்பாட்டிற்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 26 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள மளிகை கடை, உணவகம், பழக்கடை, காய்கறி மற்றும் பூக்கடைகளில், பிள்ளா நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கடைகளில் விற்பனை, பயன்பாட்டிற்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 26 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1200 அபராதம் விதித்த னர். கடையின் உரிமையா ளர்கள், தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அல்லது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த ஆய்வின்போது துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் அலுவலக பணியா ளர்கள் உடனிருந்தனர்.
Next Story
×
X