search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- அலுவலர்களுக்கு, அமைச்சர் உத்தரவு
    X

    பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- அலுவலர்களுக்கு, அமைச்சர் உத்தரவு

    • ஜல்ஜீவன் மிஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகளிர் சுய உதவி குழு வங்கி கடன் இணைப்பு மற்றும் பொருளாதார உதவித் தொகை, ஜல்ஜீவன் மிஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இ- சேவை மையம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி உட்கட்டமைப்பு. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம். சிறப்பு திட்ட செயலாக்கம் சார்பில் நான் முதல்வன் திட்டம், மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திட்டம் பணிகள் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த திட்டங்களில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நிலுவையில் உள்ள பணிகள் விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, துணை மேயர்கள் டாக்டர் அஞ்சுகம்பூபதி, தமிழழகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×