search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓய்வூதியர் உயிர்வாழ் சான்றிதழ்  1745 பேர் சமர்ப்பிக்கவில்லை
    X

    ஓய்வூதியர் உயிர்வாழ் சான்றிதழ் 1745 பேர் சமர்ப்பிக்கவில்லை

    • ஓய்வூதியர்கள் உயிழ்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நேர்காணல் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி தொடங்கி, செப்டம்பர் மாதம் 30-ந்தேதி முடிவடைந்தது.
    • இந்த நேர்காணல் முகாம் மாவட்ட கருவூல அலுவலர் யோகேஷ்வரன் தலைமையில் 3 மாதங்கள் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் உயிழ்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நேர்காணல் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி தொடங்கி, செப்டம்பர் மாதம் 30-ந்தேதி முடிவடைந்தது. இந்த நேர்காணல் முகாம் மாவட்ட கருவூல அலுவலர் யோகேஷ்வரன் தலைமையில் 3 மாதங்கள் நடைபெற்றது.

    ஓய்வூதியர்கள் நேரடியாக கலந்து கொண்டு தங்களுடைய ஆதார், மொபைல் எண், வங்கி கணக்கு புத்தகம், மற்றும் ஓய்வூதிய உத்தரவு எண் ஆகியவற்றை வழங்கி விரல் ரேகையை பதிந்து, உயிர் வாழ் சான்றை சமர்ப்பித்தனர்.

    அதுதவிர, வீடு தேடி வரும் தபால்காரரிடம் 70 ரூபாய் கட்டணத்திலும் உயிழ்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 29 ஆயிரத்து 280 ஓய்வூதியதாரர்களில் நேற்று வரை 27 ஆயிரத்து 535 பேர் உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பித்து விட்டனர். இன்னும் 1745 பேர் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை. அவர்களுக்கு மீண்டும் புதுப்பித்தல் நீட்டிப்பு வாய்ப்பு குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×